Header Ads

முப்படையினருக்கு வசதியாக நாளை நாடு முழுவது ஊரடங்குச் சட்டம்

நாளை (27) திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.


முப்படையினர் தமது முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையைில், இந்த மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவேற அறிவித்தபடி மே மாதம் 04ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.