Header Ads

ரியாத் பதியுதீனை விடுதலை செய்ய சமகி ஜன பலவேகய முயற்சியா?

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சிங்களே தேசிய அமைப்பு இன்று கருத்து வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர்கள் இந்த கருத்துகளை வெளியிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள ரியாஜ் பதியுதீன் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரை விடுதலை செய்வதற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக சிங்களே தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

சமகி ஜன பலவேகய கட்சி உட்பட சில அடிப்படைவாத சட்டத்தரணிகள் இணைந்து இருவரையும் விடுதலை செய்வதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொள்தாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழுத்தம் பிரயோகித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரையில் சட்டத்தரணி ஹிஜாஸ்ச ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணி பதவி இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
Powered by Blogger.