Header Ads

​கொரானா தொற்றால் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ள நாடுகள்

உலகில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154,245 ஆக அதிகரித்துள்ளதுடன், 2,250,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


உலக நாடுகளின் தர வரிசையில் அமெரிக்காவிலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை 37,158 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

ஸ்பெயினில் 20,002 பேரும், இத்தாலியில் 22,745 பேரும், பிரான்ஸில் 18,681 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட 4 நாடுகளிலேயே அதிகளவான மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர பிரித்தானியாவில் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 692 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 14 ஆயிரத்து 576 பேர் மரணித்துள்ளனர்.

பெல்ஜியத்தில் 36 ஆயிரத்து 138 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.

ஜேர்மனியில் ஒரு இல்சத்து 41 ஆயிரத்து 397 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 4 ஆயிரத்து 352 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் 82 ஆயிரத்து 692 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 4 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் 79 ஆயிரத்து 494 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது.

கனடாவில் 31 ஆயிரத்து 642 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஆயிரத்து 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 13 ஆயிரத்து 835 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 452 பேர் உயிரிழந்துள்ளனர்.

Powered by Blogger.