அரச வைத்திய அதிகாரிகளின் எச்சரிக்கை - ஏனைய மாவட்டங்களுக்கும் ஆபத்து
நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் சில நாட்கள் அபாயகரமானவை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்றாளர்களின் எண்ணிக்கை அகரிக்கும் பட்சத்தில் நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்புவது கடினமானதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
p c r சோதனை நடவடிக்கைகளை அதிகரித்தால் மாத்திரமே இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினரின் கவனயீனம் காரணமாகவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி நாட்டின் நிலைமையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கை மூன்றுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கடந்த மார்ச் மாதம் சுகாதாரத்துறையினரை கேட்டுக்கொண்டதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment