ஜனாதிபதிக்கே அதிகாரம் - வேறு எவருக்கும் இல்லை
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு எந்தவொரு அவசியமும் இல்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை தவிர்ந்த வேறு எவருக்கும் நாடாளுமன்றினை மீள ஒன்றுக்கூட்டும் அதிகாரம் இல்லை என்பதோடு, அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் மற்றும் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன் ஏற்கனவே காணப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு எந்தவித தேவையும் ஏற்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டள்ளார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment