சஜித்துடன் இணைந்து கொண்ட 15 உறுப்பினர்கள் மீண்டும் ரணிலுடன் டீல்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்துகொண்ட 15 பேர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுன் இணைவதற்கான பேச்சக்களை ஆரம்பித்திருப்பதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தினமும் குறித்த உறுப்பினர்கள் தொடர்புகொண்டு உரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடல்கள் நிறைவுபெற்றதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அவர்கள் சந்திக்கவும் தீர்மானம் எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரபரப்புக்கு மத்தியில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
Post a Comment