பாராளுமன்றத் தேர்தலை ஜூன் 20ம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்
எதிர்வரும் பொதுத்தேர்தலை ஜீன் மாதம் 20ஆம் திகதி நடாத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சகல கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களை நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கலந்துரையாடல் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment