Header Ads

சரத் பொன்சேகாவை விலக்கிய ரணில் - ரணிலின் அதிரடி நடவடிக்கை


ஐக்கிய தேசிய கட்சியின் களனி தேர்தல் தொகுதி புதிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் குறித்த தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா செயற்பட்டிருந்தார்.

எனினும் தற்போது அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை மேற்படி அதிரடி நியமனத்தை வழங்கியிருக்கிறது.

எதிர்வரும் ஜூன் 20ம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.