Header Ads

ரிஷத்திடம் 04 மணித்தியாலங்கள் விசாரணை

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.


அவர் இன்று முற்பகல் 10.30 அளவில் குறித்த திணைக்களத்தில் முன்னிலையான அவரிடம் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூம் பெறப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மன்னார் பகுதியில் வீடமைப்பு செயற்திட்டத்திற்காக காணி கையேற்கப்பட்ட சம்பவத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த விசாரணைகளுக்கு அமைவாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.