பொலிஸ் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்திய தேரர் கைது
வாரியபொல பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேரர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் சந்தேக நபர் இன்று வாரியபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்தையடுத்து 05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வாரியாபொல பொலிஸ் நிலையத்திற்கு குழுவொன்றுடன் சென்று கலகம் விளைவித்து பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கியதாக தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment