Header Ads

இலங்கையில் கொரோனா தொற்றால் 08 வது மரணம் - பெண் ஒருவர் உயிரிழப்பு

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


அதன்படி, குறித்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 தொற்று காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 72 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குருநாகல் பொல்பெத்திகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 194 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 519பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

No comments

Powered by Blogger.