Header Ads

மதுபானசாலைகளை திறக்க அனுமதி - ஆனால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள சிறப்பு அங்காடிகளில் மாத்திரம் மதுபானசாலைகளை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான அனுமதியை மதுவரி திணைக்களம் வழங்கியுள்ளது.

அத்துடன் ஏனைய அனைத்து மாவட்டங்களில் உள்ள சகல மதுபானசாலைகளை இன்று முதல் திறக்க முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சிறப்பு அங்காடிகளை தவிர ஏனைய இடங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டால் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.