சற்றுமுன்னர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக இன்று காலை ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தால் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவே இவ்வாறு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ண இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், சந்தேக நபரான ராஜித சேனாரத்ன தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment