Header Ads

ஆலய கிணற்றில் திடீரென பொங்கி வழியும் நீர் - அதிசயத்தை காண படையெடுக்கும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் கிணற்று நீர் திடீரென நிரம்பி வழிந்தோடுவதால் அதனை பார்வையிட பெருமளவில் பொதுமக்கள், இன்று (13) படையெடுத்துள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே உள்ள களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் கோவில் வளாகத்திலுள்ள கிணற்றில், இன்று காலை 6 மணியளவில் நீர் நிறைந்து வழிந்துள்ளமையை பக்தர்கள் அவதானித்துள்ளனர்.

இந்தச் செய்தி, அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து அதனைப் பார்வையிடக் குவிந்த பொதுமக்களை விலக்க பொலிஸார் கடும் பிரயத்தம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், விசேட அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

கிணற்றின் அருகில் சென்று பார்வையிட்டுள்ள பொதுமக்கள், நிரம்பி வழிந்த கிணற்று நீரைப் பாத்திரம் கொண்டு அள்ளி எடுத்துச் சென்றுள்ளார்கள்.

 நீர் கிணற்றின் உயர்மட்டம் வரை நிரம்பிக் காணப்படுகின்றது.

இந்தக் கிணற்றில் இருந்துதான் மேற்குப் பக்கமாக உள்ள களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் கோவில் கிரியைகளுக்கான நீர் குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.