தென்கொரிய, ஜப்பான் வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் வௌியாகியுள்ள செய்தி
கொரோனா வைரஸினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொரியா வேலைவாய்ப்பு நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொரிய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிம் வோன் சூக், நேற்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து விடுமுறை பெற்று நாடு திரும்பிய தொழிலாளர்களை மீள அழைத்தல் மற்றும் புதிதாக ஆட்சேர்ப்பு என்பவற்றை மீள அரம்பிக்கப்போவதாக கொரிய பிரதிநிதி கூறியுள்ளார்.
இதேவேளை ஜப்பான் வேலைவாய்ப்பிற்காக இலங்கை தொழிலாளர்களை அமர்த்துவதற்கான திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்யும் ஐ.எம். ஜப்பான் நிறுவனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியான எச்.கவஹரார வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தார்.
கொரோனா தாக்கத்தை அடுத்து தற்போது அதிகபடியான தொழிலாளர்களை இலங்கையிலிருந்து பெறுவதற்கு ஜப்பான் எதிர்பார்த்துள்ளதாக எச்.கவஹாரா இதன்போது கூறியுள்ளார்.

Post a Comment