Header Ads

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன.


கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த கொடிய வைரஸ் உயிரிழப்புகளை மட்டும் இன்றி வேலையிழப்பு, பொருளாதார சரிவு போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து, ஜூன் 1ஆம் திகதி வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூகுள் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது வாய்ப்பு இருப்பவர்கள், இந்த ஆண்டு முழுவதுமே வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஜூலை 6ஆம் திகதி வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கியிருந்த பேஸ்புக் நிறுவனம், பணியாளர்கள் விரும்பினால் இந்த ஆண்டு இறுதி வரையிலும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.