Header Ads

ஐக்கிய தேசிய கட்சிக்குள் திடீர் மாற்றம்? ரணிலின் அதிரடி நடவடிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாகல ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பொதுச் செயலாளர் பதவியில் உள்ள முன்னாள் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேவேளை தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக உள்ள முன்னாள அமைச்சர் ரவி கருணாநாயக்க அப்பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீரமானத்திற்கு கட்சியிலுள்ள சிரேஸ்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.