Header Ads

​பொத்துவில் கடற்கரை விகாரையின் பாதுகாப்புக்கு கடற்படை

அம்பாறை முஹுது மஹா விகாரையின் பாதுகாப்பு கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று மாலை குறித்த விகாரைக்கு சென்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் விகாரையின் பாதுகாப்பு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், இன்று வெள்ளிக்கிழமை முதல் கடற்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த விகாரைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் உள்ள சிறுபான்மை மக்கள் வளைத்துப் போட்டுக்கொண்டதாக ரத்தன தேரர் மற்றும் பொதுபல சேனா கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விகாரைக்கு கடற்படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.