Header Ads

தாக்குதலுக்கு முன்னைய நாள் கொழும்பு நகரில் சுற்றித் திரிந்த சஹ்ரான் உள்ளிட்ட குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய நாள் குறித்த குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹஷீம் உள்ளிட்ட குண்டு தற்கொலைத்தாரிகள் அனைவரும் கொழும்பு நகரில் சுற்றித் திரிந்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடமையாற்றிய காவல்துறை அதிகாரிகள் சிலர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறித்த விடயத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் நடந்த நேரத்தில் கொழும்பு மத்திய காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக செயல்பட்டு வந்த காவல்துறை அதிகாரி சாந்த விக்ரமசிங்க மற்றும் கொழும்பு கோட்டை காவல்துறையின் பொறுப்பதிகாரியாக செயல்பட்டு வந்த பிரதான தலைமை காவல்துறை ஆய்வாளர் சரத் குமாரசிங்க ஆகியோரும் ஜனாதிபதி குறித்த ஆணைக்குழுவில் இது தொடர்பில் சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் இடம்பெற உள்ளதாக தகவல் கிடைத்த பின்னர், கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆலோசனை கிடைக்கப் பெற்றதன் பின்னர் ஹரான் ஹஷீம் உள்ளிட்ட குண்டு தற்கொலைத்தாரிகள் அனைவரும் கொழும்பு நகரில் சுற்றித் திரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கிங்க்ஸ்பேரி ஹோட்டலில் தாக்குதல் நடத்த வந்த தாக்குதல்தாரி தாக்குதலுக்கு முன்னைய நாள் 20ம் திகதி இரவு முச்சக்கர வண்டி ஒன்றில் கொலன்னாவ பிரதேசத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன், சங்கரீலா ஹேட்டலுக்கு தாக்குதல் நடத்த வந்த இருவரும் 20ம் திகதி இரவு 09 மணியளவில் ஹோட்டலில் இருந்து வௌியே வந்து பல இடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 11 மணியளவில் ஹேட்டலுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.