Header Ads

இரண்டு பகுதிகளில் கத்தோலிக்க தேவாலய சிலைகள் உடைப்பு - பொலிஸார் தீவிர விசாரணை

புத்தளம் மற்றும் பாலாவி ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயத்தின் மாதா சிலைகள் மீது இனந்தெரியாதோரால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.



இந்த தாக்குதலினால் மாதா சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் ௯ண்டுப் பகுதி சேதமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெலிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் புத்தளத்தை சேர்ந்த மதகுரு ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை பொலிஸார் மற்றும் பொலிஸ் நாய்களுடன் இணைந்து தற்போது வரையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் நாசகார செயற்பாடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.







No comments

Powered by Blogger.