Header Ads

ஜூன் 20ல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது தேர்தல் ஆணைக்குழு சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.

சுகாதார அமைச்சினால் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்தக் கூடிய சாதகமான சூழல் குறித்து அறிவிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது என்று அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

குறித்த அறிவிப்பின் பின் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது கட்சிக்காரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் குறித்த மனு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படாது என நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஏனைய மனுக்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.