Header Ads

சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்தவர் காத்தான்குடியில் கைது

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் புதன்கிழமை (06) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்பு 4 மாடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற வெடி விபத்து ஒன்றில் சஹ்ரானின் சகோதரனான முகமட் றில்வான் காயமடைந்து வைத்தியசாலைக்கு செல்லாமல் மறைந்து ஒல்லிக்குளம் முகாமில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

அப்போது அவருக்கு மருத்துவ உதவிகள் செய்த குற்றச்சாட்டில் அரச ஸ்தாபனம் ஒன்றில் கடமையாற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழன்.lk

No comments

Powered by Blogger.