சஜித்தின் புதிய கட்சி சிக்கலில் - தலைமையகத்துக்கு பூட்டு; ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் தற்சமயம் மூடப்பட்டிருப்பதாக பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சிங்கள இணையத்தளமொன்றும் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டிடத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இயங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்க சூழலில் அதில் தொழில்புரியும் ஊழியர்களுக்குக்கூட சம்பளம் வழங்கப்படவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தற்சமயம் எதிர்கட்சித் தலைவரது அலுவலகத்திலேயே ஊடக சந்திப்புக்களை நடத்திவருகின்றனர்.
இதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பல தரப்பினரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment