Header Ads

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க


சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு முன்னாள் இராணுவ உயர் அதிகாரியொருவர் நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் தற்போது இராணுவ சுகாதாரப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி நியமனம் தொடர்பில் சுகாதார அமைச்சு இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.