முன்னாள் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சரின் வீட்டில் சட்டவிரோத கசிப்பு
முன்னாள் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் வீட்டில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 15 கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சராக இருந்த முன்னாள் எம்.பி நளின் பண்டாரவின் குருநாகல் – குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இல்லத்திலிருந்து சட்டவிரோத மதுபோத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குளியாப்பிடிய பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய முன்னாள் அமைச்சரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 15 கசிப்பு போத்தல்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Post a Comment