Header Ads

தேர்தல் கடமைகளில் 02 இலட்சம் அரச ஊழியர்கள்; வாக்கெண்ணும் பணிகளுக்கு 48 ஆயிரம் பேர்



எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள 2019 ஜனாதிபதித் தேர்தலி கடமைகளில்  இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.அதில் 80 வீதம் பெண்கள் என கூறப்பட்டது.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் இவர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஏ.எஸ்.பி.ஜயசிங்க தெரிவித்தார். 

இந் நிலையில் தற்போது தேர்தல் கடமைகளுக்கு அரச ஊழியர்களை ஈடுபடுத்தும் விதமாக திட்டம்  தயார் செய்யப்ப்ட்டு அதனை அமுல் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தேர்தல்கள் ஆணைக் குழு தகவல்கள் பிரகாரம்,  வாக்கெண்ணும் பணிகளில் மட்டும் சுமார் 48 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

அதனைவிட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள்  வாக்களிப்பு நிலைய பனிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  

இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நலன்புரி மற்றும் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன. 

குறித்த பட்சம் ஒரு வககளிப்பு நிலையத்தில் 8 அரச ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் எனவும், வககளிப்பு நிலையத்தின் தேவைக்கு ஏற்ப அந்த எண்ணிக்கை அதிகரிக்கபப்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Powered by Blogger.