கோட்டா வெற்றி பெற்றால் இன்னும் 03 தலைமுறை வரை ராஜபக்ஷக்களே ஆட்சி செய்வர்
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றால் ஏற்படப் போகும் விளைவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ராஜபக்ஷர்கள் மூன்று பரம்பரைகளாக இலங்கையை ஆட்சி செய்வார்கள் என என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள அதிகாரதத்தை இம்முறை தேர்தலில் எப்படியாவது பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாஸவுக்காக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment