Header Ads

10 இலட்சம் மேலதிக வாக்குகளுடன் சஜித் வெற்றி பெறுவார்



கடந்த 05 ஆண்டுகளுக்கு முன்பு மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியும் என்று பலர் நம்பவில்லை என்று சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சர் ராஜித சேனாரதன் கூறியுள்ளார்.

அன்று பெற்ற வெற்றியை மீண்டும் மறுபக்கத்திற்கு திரும்பி கொலைகாரருக்கும் திருடர்களுக்கும் வழங்குவதா என்று எதிர்வரும் 16ம் திகதி தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று இறக்குவானை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

 மீண்டும் கொலைகாரருக்கும் திருடர்களுக்கும் நாட்டை வழங்குவதற்கு பெரும்பாலான மக்கள் விரும்பமாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ள அவர், நவம்பர் 16ம் திகதி 10  இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்பார் என கூறியுள்ளார்.


Powered by Blogger.