Header Ads

சஹ்ரானின் காணொளிகளால் தீவிரவாத தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது


ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் 127 பேர்
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய அரசின் பயங்கரவாதக் குழுவின் தலைவராகக் கருதப்படும்
'சாக்கீர் நாயக்கை' பின்பற்றுபவர்கள் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் அலோக் மிக்தல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் உயிர்த்த ஞாயிற தின தாக்குதலுக்கு காரணமான சஹாரான் ஹாசீமின் காணொளிகைளை பார்வையிட்டு அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


சஹாரான் ஹாசீமினின் காணொளிகளை பார்வையிட்டு அதனூடாக தாம் தீவிரவாத மயப்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக
நேற்று நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவர்கள் கூட்டத்தில் அலோக் மிக்தால் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 33 பேர் அடங்குவதாகவும் அலோக் மிக்தால் தெரிவித்துள்ளார்.

அதற்கும் மேலதிகமாக உத்ரபிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலுங்கானாவில் 17 பேரும், மகாராஸ்டிராவில் 14 பேரும், கார்னாடாகாவில் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.