நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகள் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது
தான் ஜனாதிபதியானால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவேன் என ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை செயற்படுத்த சஜித் பிரேமதாச கடமைபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரெஸ்ஸ பகுதியில் நேற்று (14) நடைபெற்ற தேசிய மக்கள் படையணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
கடந்த ஐந்து வருடங்களில் நாட்டின் தனிநபர் வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அதேபோல் நாட்டில் வேலையில்லா பிரச்சனை அதிகரித்து வறுமை நிலை தலைதூக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் பயங்கரவாத செயற்பாடுகள் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே
நாட்டை அறுவருக்கதக்க நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறான ஒருவர் எதிர்கால அரசாங்கத்திலும் ஆட்சியை கைபற்ற துடிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment