Header Ads

இ.தொ.கா. வின் 32 கோரிக்கைகளில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கை என்ன?



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது முப்பத்திரண்டு கோரிக்கைகளை முன்வைத்து பொதுஜன பெரமுனவுடன் ஒருபக்கமும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் மறுபக்கமும் பேச்சுவார்த்தைகள் நடாத்தியது.

அந்த முப்பத்திரண்டு கோரிக்கைகளில் எந்த கோரிக்கையை ஐக்கிய தேசிய முன்னணி நிராகரித்தது என்பதை பேச்சுவார்த்தைகள் நடாத்திய தார்மீகத்தின் அடிப்படையில் இ.தொ.கா வெளிப்படுத்த வேண்டும்.

இ.தொ.காவால் ஐக்கிய தேசிய முன்னணியிடம் முன்வைத்து அவர்கள் நிராகரித்த கோரிக்கைகளை நாங்கள் செய்து காட்டுவதை சவாலாக ஏற்கிறோம் என்கிறார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஹட்டனில் நடைபெற்றது.


முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கம்போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வெற்றி வேட்பாளர் சஜித் என அறிவிக்கப்பட்ட பின்னர் எட்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். எந்த அடிப்படையில் அந்த பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றால் முப்பத்திரண்டு கோரிக்கைகள் வைத்து என்கிறார்கள்.

முப்பத்திரண்டு வருடகாலமாக அமைச்சு பதவி வகித்தவர்கள் ஒரு தடவைக்கு ஒரு கோரிக்கை என நிறைவேற்றி இருந்தாலே அவர்கள் கோரிக்கை எல்லாமே நிறைவேற்றப்பட்டு இருக்கும்.

நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக கடந்த ஐந்து வருடத்தில் செய்த பணிகளின் தொடர்ச்சியாக பத்து அம்சங்களை புதிய ஜனநாயக முன்னணியின விஞ்ஞானபனத்தில் சேர்க்கவுள்ளோம்.

அவர்களது முப்பத்திரண்டு கோரிக்கைகளையும் பொதுஜன பெரமுன ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர்களது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கபடும் என்பதை வரவேற்கிறோம். அந்த முப்பத்திரண்டையும் அந்த விஞ்ஞானத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்.

அந்த முப்பத்திரண்டு கோரிக்கைகளையும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் முன்வைத்துதான் இ.தொ.கா பேச்சுவார்த்தைகள் நடாத்தியது என்றால் அதில் எந்த கோரிக்கையை ஐக்கிய தேசிய முன்னணி நிராகரித்தது என்பதை பேச்சு நடாத்திய தார்மீகத்தின் அடிப்படையில் இ.தொ.கா வெளிப்படுத்த வேண்டும்.

அவற்றை அதே ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து நாங்கள் செய்து காட்டுவோம் என்றார்.
 




No comments

Powered by Blogger.