கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் அவரது ஜனாதிபதி பதவி இரத்து செய்யப்படும்
தவறுதலாகவாவத கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நீதிமன்றம் சென்று அவரது ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சிின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாயக்கார கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றும், அவரத இலங்கை குடியுரிமை தொடர்பிலம் சிக்கல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அது தொடர்பான எந்நதவித ஆவணங்களையும் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாஸவின் தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Post a Comment