Header Ads

சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலருடன் சந்திரிகா சஜித்துக்கு ஆதரவு



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆதரவு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கும் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க அம்மையார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்னும் சிலரை அழைத்துக்கொண்டு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க வருவார் என கூறினார்.

தேசிய பாதுகாப்பு குறித்து அதிக அனுபவத்தை பெற்ற ஒருவர் பாதுகாப்பு
அமைச்சராக முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்
Powered by Blogger.