Header Ads

சந்திரிகா தலைமையில் அத்திவாரம் போட்டு விட்டோம்; அடுத்தது ஆட்டம் தான்



ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்கான அத்திவாரம் தற்போது போடப்பட்டு விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இந்த வேலைத் திட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெற்றால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மீதமிருக்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்கு தான் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.