Header Ads

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதா சுதந்திர கட்சியை பாதுகாக்கும்?



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம ஆகியோர்  தவறான அரசியல் நிலைப்பாட்டை  தற்போது கொண்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வியத்மக அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமையினால் அக்கட்சியின் தனித்துவம் பாதிக்கப்படும் என்று சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் சுயநல கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். 

ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு  வழங்குவதா  சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் கொள்கை  என்ற கேள்வி தோற்றம் பெறுகின்றது.

முன்னாள்  ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம ஆகியோர்   தற்போது அரசியல் ரீதியில் தவறான  நிலைப்பாட்டினை கொண்டுள்ளார்கள்.

சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய  கட்சியுடன் கூட்டணியமைத்து தேசிய அரசாங்கத்தினை தோற்றுவித்ததாலே  சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் பலவீனமடைந்தது. 

சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இரு தரப்பினரும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்துள்ளதாகவும அவர் கூறினார்.


Powered by Blogger.