சஜித்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள பிரதேச சபை உறுப்பினர்கள்
ஹிக்கடுவை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் சுகத் தம்மிக லால் மற்றும் இமதுவ பிரதேச சபை உறுப்பினர் அருண கமகே ஆகியோ ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன் வந்துள்ளனர்.
அண்மையில் வந்துரம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவர்கள் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
தான் கட்சியில் இருந்து விலகாமல் கட்சிக்குள்ளே இருந்து கொண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததாக ஹிக்கடுவை பிரதேச சபையின் உறுப்பினர் சுகத் தம்மிக லால் கூறினார்.

Post a Comment