அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு
நம்பிக்கையின் உதயம்´ என்று பெயரிடப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) முற்பகல் கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் இடம்பெற்றது.
பல்வேறு துறைகள் தொடர்பில் கொள்கை மற்றும் திட்டங்களை கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌியிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் உள்ளடக்கி ´நம்பிக்கையின் உதயம்´ என்ற பெயரில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மகா சங்கத்தினர், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள், புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக தனது கொள்கை மற்றும் திட்டங்களை கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌியிட்டிருந்த நிலையில், அவை அனைத்தின் உள்ளடக்கமே ´நம்பிக்கையின் உதயம்´ என்ற பெயரில் தேர்தல் விஞ்ஞாபனமாக வௌியிடப்பட்டுள்ளது.
Post a Comment