Header Ads

சஜித்தின் கோல்பேஸ் கூட்டத்திற்கு எதிராக எழுந்துள்ள புதிய சர்ச்சை


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் (10) கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற பேரணிக்கு அரச ஊழியர்கள் மற்றும் அரச அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளதாக புகார் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ள மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகளின் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு (NEM-IHR), கூட்டத்தில் ஊழியர் அறக்கட்டளை நிதி வாரிய ஊழியர்கள் ஒரு குழு கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளது.

அவர்களை கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல அதே அமைப்பைச் சேர்ந்த ஒரு பஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக NEM-IHR கூறுகிறது.

அவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்களாவதுடன், அவர்களுக்கு நேற்று ஒரு குறுகிய விடுமுறை வழங்கப்பட்டு பஸ்வண்டிகள் மூலம் குறித்த பேரணிக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  NEM-IHR  தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.