எல்பிட்டிய தேர்தல்; மொட்டு மலர்ந்தது; UNP படுதோல்வி; முழு விபரம் இதோ!

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடைபெற்ற தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌிவந்துள்ளன.
வௌியாகியுள்ள முடிவுகளின் படி ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வி அடைந்துள்ளது.
அதன்படி எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 23,372 வாக்குகள் - 17 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 10,113 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 5,273 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 2,435 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி - 310 வாக்குகள் - உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 47 நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் அதில் 72 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.













Post a Comment