சர்ச்சைக்குரிய.. மன்னிக்கவும்.. தமிழர்களின் காவலன் கோட்டாவுடன் இணைவு
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தோடு வேட்பாளர்களுக்கான ஆதரவையும் ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வருகின்றனர்.
அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment