ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் அறிவிக்கப்பட்டது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா
பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு
வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

Post a Comment