அனைத்து இன மக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழலாம்
அனைத்து இன மக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழக் கூடிய சூழல் தங்களது அரசாங்கத்தாலே ஏற்படுத்த முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் தமிழ் மக்கள் இன்னல்களுக்கே முகங்கொடுத்தாக குறிப்பிட்டார்.
இந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.சதாசிவம், தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினாலே வழங்க முடியும் என கூறினார்.

Post a Comment