Header Ads

கோட்டா செய்வதாக கூறுவதை உங்களால் செய்ய முடியாதா? விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்




தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் பௌர்ணமி தினத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.விக்னேஸவரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் இன்று (30) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

தான் பதவிக்கு வந்தால் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்வதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதையும் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அவர் செய்வதாக கூறும் விடயத்தை ஜனாதிபதியாகிய உங்களால் தற்போது செய்து முடிக்க முடியும் எனவும் அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கமாட்டார்கள் எனவும் ஆகவே எதிர்வரும் பௌர்ணமி தினத்திற்குள் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறும் அவர் ஜனாதிபதியை கேட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வழங்கிய ஏகோபித்த வாக்குகளுக்கு கைமாறாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்
க.விக்னேஸவரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

Powered by Blogger.