Header Ads

நிஸ்ஸங்க சேனாதிபதி விளக்கமறியலில்

நிஸ்ஸங்க சேனாதிபதி நவம்பர் 8 ஆம் திகதி வ​ரை விளக்கமறியல்
எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நவம்பர் 8 ஆம் திகதி வ​ரை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவன் கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்று நள்ளிரவு 11.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ468 ரக விமானத்தில் இலங்கை வந்திருந்த போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எவன்கார்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய வழக்கு ஒன்று தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றம் வெளியிட்டிருந்த உத்தரவு ஒன்றிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Powered by Blogger.