Header Ads

ஜனாதிபதி தேர்தலுக்காக சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தினார்; கோட்டாவுக்கு ஆதரவு?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும், எம்.கே.சிவாஜிலிங்கமும் இணைந்தே சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.