Header Ads

பொதுஜன பெரமுன கூட்டத்திற்கு சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு - 03 பொலிஸாரும் பணி நீக்கம்


கேகாலையில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் கூட்டத்திற்கு சென்று ஆதரவாளர்களுடன் பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவதி ஒருவர், அவருடன் பயணித்த இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
தனது மனைவியுடன் பிரசார கூட்டத்தில் பங்கேற்க சென்ற மகள், நேற்று இரவு 11 மணிவரை வீடு திரும்பவில்லை என, யுவதியின் தந்தை தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் ஹெம்மாதகம பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது, அரசியல் பிராசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனால் குறித்த யுவதி, ஹெம்மாதகம பலவத்தக காட்டுப்பகுதியில் பஸ்ஸில் இருந்து இறக்கி அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபரான இளைஞன் குறித்த யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் சந்தேக நபரான ஹெம்மாதகம பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கூட்டத்தில் என்மீது நம்பிக்கை கொள்ளுங்கள் அனைவரும் சுதந்திரமாக வாழும் பாதுகாப்பான நாட்டை மீண்டும் பெற்றுக் கொடுப்பேன் என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதேவேளை  இந்த சம்பவம் தொடர்பில் முறையானை விசாரணைகளை முன்னெடுக்காத பொலிஸ் உத்தியோகத்தர்கள் 03 பேர் பணி  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Powered by Blogger.