Header Ads

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த இறுதி சிரேஸ்ட தலைவர்



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த இறுதி சிரேஸ்ட தலைவர் காலஞ்சென்ற பிரதமர் தி.மு.ஜயரத்ன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



காலஞ்சென்ற பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தானும், விஜேய குமாரதுங்கவும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவுடன் மிக நெருங்கி செய்ற்பட்டதாகவும் அவர் ஒருபோதும் சுதந்திரக் கட்சிக்கு சேதம் ஏற்படுத்தவில்லை எனவும் கூறினார்.

எனவே தி.மு.ஜயரத்னவின் மறைவு அரசியல் துறைக்கு பெரும் இழப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.