சற்றுமுன்னர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டவர்கள் விபரம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுகிறது.
அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசன, கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி மறுசீரமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் சுதேச மருத்துவம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புத்தாக்கல் அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹாவலி கமத் தொழில், நீர்பாசனத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக டளஸ் அலகபெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சராக விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சராக ரமேஸ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment