Header Ads

தனது 04 சகாக்களுக்காக சஜித் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை தினம் இடம்பெறவுள்ளது.


இந்த நிலையில், செயற்குழுக் கூட்டத்தை புறக்கணிப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரேமதாஸ உட்பட அவருக்கு ஆதரவளிக்கும் தரப்பினர் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்காதவர்களுள், நான்கு பேரின் செயற்குழு உறுப்புரிமை நீக்கப்பட்டமை இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த நான்கு உறுப்பினர்களையும், செயற்குழுவில் மீண்டும் இணைப்பதற்கு கட்சியில் உள்ளக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவர்கள் நால்வரையும் செயற்குழுவில் மீண்டும் இணைத்தால் மாத்திரமே நாளைய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிலைப்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட அவரின் ஆதரவாளர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.