Header Ads

30 மில்லியன் சட்டவிரோத நிதி - நாமலுக்கு எதிரான வழக்கு

சட்டவிரோத நிதி மூலம் கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று (12) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இரண்டு சாட்சியாளர்களிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது.

அதன்பின், வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ம் திகதி வரை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Powered by Blogger.